திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம்: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம்: அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 6 Feb 2021 12:40 PM IST (Updated: 6 Feb 2021 12:40 PM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர், 

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய தலைவர் சத்யா தலைமை தாங்கினார் துணைத்தலைவர் சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பன் ஆகிேயார் முன்னிலை வகித்தினர். 

ஆனால் கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடிவடைந்தது. 

இதுபற்றி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறும் போது, எங்களுக்கு எந்த ஒரு அரசு நிகழ்ச்சிக்கும் ஒன்றிய தலைவர் தகவல் தெரிவிப்பதில்லை. வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. அ.தி.மு.க.வில் 8 கவுன்சிலர்கள் உள்ளோம். தி.மு.க.வில் 6 கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து கலெக்டரிடம் மனு அளிக்க இருக்கிறோம் என்றனர்.

இதுபற்றி ஒன்றிய தலைவர் சத்யா கூறும் போது, குடியரசு தினத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விருது வாங்குவதற்காக கலெக்டர் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். அதனால் அழைக்க முடியவில்லை. அனைத்து கவுன்சிலர்களுக்கும் வளர்ச்சி நிதி சமமாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது எங்களுக்கே தெரிவதில்லை என்றார்.

Next Story