விவசாய கடன் தள்ளுபடி எதிரொலியாக அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
விவசாய கடன் தள்ளுபடி எதிரொலியாக அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்.
திருச்சி,
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளால் வாங்கப்பட்ட பயிர்க்கடன் ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து நேற்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை வரவேற்கும் வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள தில்லை நகர் பிரதான சாலையில் நேற்று முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி தலைமையில் அ.திமு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும் விவசாயிகளின் காவலன் எடப்பாடி பழனிசாமி என கட்சியினர் புகழாரம் சூட்டினர்.நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story