மதுரை: புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 12 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் மதுரையில் நேற்று 12 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 8 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 100 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதுபோல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் ஒருவர் பலியானார். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 459 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story