தீ செயலி மூலம் 2,243 பேர் மீட்கப்பட்டுள்ளனர்


தீ செயலி மூலம் 2,243 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
x
தினத்தந்தி 6 Feb 2021 6:57 PM IST (Updated: 6 Feb 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

தீ செயலி மூலம் 2,243 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ஜோலார்பேட்டை

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தீயணைப்புத் துறை சார்பில் தீ என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து ஏலகிரிமலைக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தனது குழுவினருடன் சைக்கிள்பேரணியாக வந்தார்.

நேற்று முன்தினம் மாலை சென்னை பூந்தமல்லி தீயணைப்புத் துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கி திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு நேற்று மதியம் வந்தார். அவருடன் விழுப்புரம் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் ராபின் கேஸ்ட்ரோ உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் வந்தனர்.

கலெக்டர் வரவேற்பு

நேற்று காலை 11 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதிக்கு வந்த அவர்களை மாவட்ட கலெக்டர் சிவன்அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். 

அதைத்தொடர்ந்து ஏலகிரி மலையில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகளை சைக்கிளில் கடந்து அங்குள்ள தனியார் கல்லூரி அருகில் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை முடித்துக்கொண்டார்.
பின்னர் இதுகுறித்து சைலேந்திரபாபு கூறியதாவது:-

2,243 பேர் மீட்பு

இதுவரை இந்த செயலி மூலம் 25 ஆயிரம் தீ விபத்துகள் குறித்தும், 23 ஆயிரம் மீட்பு பணிகள் குறித்தும் அழைப்புகள் வந்திருக்கிறது. இதில் 2,243 பேர் உயிரோடு மீட்கப் பட்டிருக்கிறார்கள். இன்த பணியின்போது மதுரை மற்றும் பெரம்பலூரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் இறந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்புத் துறை துணை இயக்குனர்கள் சத்யநாராயணன் மற்றும் மீனாட்சி விஜயகுமார், ராணிப்பேட்டை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், திருவண்ணாமலை மாவட்ட அலுவலர் முரளி, திருப்பத்தூர் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story