வேலூர்; ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலூர்; ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2021 9:17 PM IST (Updated: 6 Feb 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு வேலூர் கிளை சார்பில் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள மண்டல அரசு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பொதுச்செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். சி.ஜ.டி.யு. மாவட்ட செயலாளர் பரந்தாமன், சங்க துணைத்தலைவர் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுப்பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 67 மாத கால நிலுவை பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 

முடிவில், சங்க துணைத்தலைவர் அர்சுனன் நன்றி கூறினார்.

Next Story