ஆம்பூர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்


ஆம்பூர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Feb 2021 9:30 PM IST (Updated: 6 Feb 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை கண்டித்தும் ஆம்பூர் பைபாஸ் சாலையில் காங்கிரஸ் கட்சியினர் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மறியலில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சாய் கே.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ், மாவட்ட செயலாளர் சாந்தகுமார், ஆம்பூர் நகர தலைவர் சரவணன், ஒன்றிய தலைவர் சங்கர், மாவட்ட பொதுச்செயலாளர் மின்னூர் சங்கர் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story