அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 15-ந்தேதி கடைசி நாள்


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை 15-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 6 Feb 2021 11:53 PM IST (Updated: 7 Feb 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலி இடங்களுக்கு மாணவர் நேரடி சேர்க்கை வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலி இடங்கள் பல்வேறு தொழிற்பிரிவுகளில் உள்ளது. அதனை நேரடி சேர்க்கை மூலமாக வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 10 மற்றும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவரும் பயிற்சியில் சேரலாம்.

மகளிருக்கு கணினி பயிற்சி மற்றும் டெக்னீசியன், மெக்கட்ரானிக்ஸ் தொழிற்பிரிவுகள் உள்ளன. மகளிருக்கு வயது வரம்பு இல்லை. இதில் சேர 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இரண்டும் அல்லது ஏதேனும் ஒன்று கொண்டுவர வேண்டும். சாதி சான்றிதழ் அசல், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல், நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டா, ஏ.டி.எம். கார்டு (கல்விக்கட்டணம் செலுத்துவதற்கு) ஆகியவற்றுடன் வர வேண்டும்.
 
உடனடி வேலைவாய்ப்புகள் கிடைத்திடும் பல்வேறு தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களில் சேர்ந்து மாணவ, மாணவிகள் பயன்பெறலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பயணசலுகை அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள் போன்றவை இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story