நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவையும், நல்ல மாற்றத்தையும் தரும்; திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி


நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவையும், நல்ல மாற்றத்தையும் தரும்; திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2021 5:05 AM IST (Updated: 7 Feb 2021 5:05 AM IST)
t-max-icont-min-icon

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவையும், நல்ல மாற்றத்தையும் தரும் என்று திருச்சியில் பாரிவேந்தர் எம்.பி. பேட்டி அளித்தார்

பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.
பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன் உட்பட பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், சட்டமன்ற தேர்தலில் நிறுவன தலைவர் பாரிவேந்தர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என்பது உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக பாரிவேந்தர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, பயிர்கடன் தள்ளுபடி செய்ய தூண்டிய தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. இந்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்கு விடிவை தரும், நல்ல மாற்றத்தை தரும். அரசியல் மாற்றம் நடந்தே தீரும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொடுக்கும். இது நான் மட்டும் அல்ல நாட்டு மக்களும் நினைக்கிறார்கள் என்றார்.

Next Story