விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பா.ஜனதா அரசு நிராகரிக்கிறது; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பா.ஜனதா அரசு நிராகரிக்கிறது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
பொறுப்பாளர்கள் கூட்டம்
சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி அமைக்க ேவண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியினரும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும்.
பா.ஜனதா நிராகரிக்கிறது
தமிழ் மொழிக்கு விரோதமாக இந்தி மொழியை திணிக்கும் கட்சியாக பா.ஜனதா விளங்கி வருகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என ஒற்றுமையை சீர்குலைக்கின்ற கட்சியாக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வின் மேல் ஏறி சவாரி செய்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும் பா.ஜனதா அரசு நிராகரித்து வருகிறது.
தற்போது மத்திய அரசு அறிவித்த பட்ஜெட் பலன் தராத பட்ஜெட். பொதுத்துறை நிறுவனங்களை ஏன் தனியார் மயமாக்க வேண்டும். ஏற்கனவே தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக தனியார் வங்கிகள் வேண்டும் என்றால் கூடுதல் லைசென்சுகள் வழங்க வேண்டியது தானே. கூட்டுறவு வங்கிகளும் இருக்க வேண்டும். 3 வங்கிகளும் மக்கள் சேவைக்காக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விழாவிற்கு வந்த அனைவரையும் காங்கிரஸ் வட்டார தலைவர் ஜெயராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், சிங்கம்புணரி தாயுமானவன், காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story