வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழு கூட்டம்
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
கரூர்,
கரூரில் நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். வருகிற 9-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் தொடங்குவது. வருகிற 24-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் தனலெட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் அரசகுமார், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story