20 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு
20 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு.
பல்லடம்,
பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சி காந்திநகரில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் 10 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீர் கடந்த 20 நாட்களாகியும் வரவில்லை. சப்பை தண்ணீரும் வருவதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் கடந்த 20 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதில்லை, மேலும் சப்பை தண்ணீரும் நிறுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் இன்னும் குடிநீர் வழங்கவில்லை. சாலை போடும் பணியால், குடிநீர் வழங்க முடியவில்லை, என ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். மாற்று ஏற்பாடாக லாரிகளில் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர், மற்றும் சப்பை தண்ணீர் இரண்டும் இல்லாமல். நாங்கள் கடும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து எங்களுக்கு குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story