புதிய வாக்காளர்கள் மின்னணு வண்ண அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்
புதிய வாக்காளர்கள் மின்னணு வண்ண அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பெரம்பலூர்,
இந்திய தேர்தல் ஆணையம் 11-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகின்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்தில் இணைந்த புதிய வாக்காளர்கள் மட்டும் Voter Helpline என்ற செயலி மூலமாகவோ அல்லது www.nvsp.in என்ற இணையதளத்திலோ தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து தங்களது மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து, சுயமாக அச்சடித்து லேமினேட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தங்களது செல்போனிலோ அல்லது டிஜிலாக்கரில் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தகவல் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story