விக்கிரமசிங்கபுரம் அருகே 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்
விக்கிரமசிங்கபுரம் அருகே 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா சுப்பிரமணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகநயினார். இவருடைய மகன் செந்தூர்முருகன் (வயது 9), மகள் பாலசுப்ரியா (6). அதே பகுதியை சேர்ந்த பழனி மகள் பானுமதி (17). இவர்கள் 3 பேரும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.
இதில் செந்தூர்முருகன், பாலசுப்ரியா ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், பானுமதி அம்பை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில், 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மல்லிகா, அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசெல்வி, ஆணையாளர் மணி, சிவந்திபுரம் சுகாதார ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் சுகாதார பணிகளை முடுக்கி விட்டனர். சிவந்திபுரம் பஞ்சாயத்து செயலர் வேலு, சுகாதார மேஸ்திரி பெல்பின் ஆகியோர் அந்த பகுதியை சுத்தப்படுத்தி கொசு ஒழிப்பு மருந்து அடித்தனர்.
Related Tags :
Next Story