சிறப்பு ரெயில்களை ரத்து ெசய்துவிட்டு வழக்கமான ரெயில்களை இயக்க வேண்டும்
சிறப்பு ரெயில்களை ரத்து ெசய்துவிட்டு வழக்கமான ரெயில்களை இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரிப்பாக்கம்
பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ெரயில் நிலையத்தில் ெரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம், கிராம பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு அறப்போராட்டம் நடந்தது. சோளிங்கர் ெரயில் பயணிகள் நலச் சங்க பொதுச் செயலாளர் சர்புல்லா தலைமை தாங்கினார். அனைத்து ெரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், சென்னை கோட்ட ெரயில் பயணியர் ஆலோசனை குழு உறுப்பினருமான நைனா மாசிலாமணி கவன ஈர்ப்பு கண்டன உரையாற்றினார்.
அறப்போராட்டத்தில், கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட சோளிங்கர் ெரயில் நிலையத்தில் நின்று சென்ற அனைத்து ெரயில்களும் தினசரி பயணிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் கருதி உடனடியாக இயக்க வேண்டும், சிறப்பு ெரயில்களாக அறிவித்த ெரயில்களை ரத்து செய்து, வழக்கமான ெரயில்களாக இயக்கி அன்றாட வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர் பயணிக்கும் வகையில் முன்பதிவை நீக்கி பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு பெற்று பயணிக்கும் வகையில் ெரயில்களை இயக்க வேண்டும்,
சோளிங்கர் ெரயில் நிலையத்துக்குட்பட்ட பல கிராமங்கள் சென்னை மெட்ரோ சிட்டி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்மர் கோவில், யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து விரைவு மற்றும் பாசஞ்சர் ரெயில்களை இயக்கவும், சோளிங்கர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதில் வாலாஜாரோடு, சோளிங்கர், சித்தேரி, திருத்தணி, அரக்கோணம், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய ெரயில் பயணிகள் சங்க பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டர்.
Related Tags :
Next Story