செங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


செங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2021 1:22 AM IST (Updated: 8 Feb 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செங்கோட்டை:
முகம்மது நபி பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா நிர்வாகி கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் அனைத்து முஸ்லிம் ஜமாத், அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நகர செயலாளா் அல்ஹக்கீம் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாநில துணை தலைவா் கோவை செய்யது மற்றும் அனைத்து இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் செங்கோட்டை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story