அரசு ஊழியர்கள் 50 பேர் கைது
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகை மற்றும் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று திண்டுக்கல்லில் 6-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திண்டுக்கல் பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது 6 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இறுதியில் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story