அந்தியூர் அருகே புடவைக்காரி அம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலம்
அந்தியூர் அருகே புடவைக்காரி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவைெயாட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே புடவைக்காரி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவைெயாட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
அக்னி சட்டி எடுத்து ஊர்வலம்
அந்தியூர் அருகே உள்ள ஓசைபட்டி கிராமத்தில் மிகவும் பழமையானதும் புகழ் பெற்றதுமான புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேகத்துடன், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜை நடந்து வருகிறது. நேற்று காலை பக்தர்கள் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் அக்னி சட்டி எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.
அன்னதானம்
மதியம் 3 மணி அளவில் திருமுனி, ராஜமுனி, கருப்புசாமி ஆகிய காவல் தெய்வங்களுக்கு பெரும் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆட்டு கிடாய்களை பலி கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் கிடாய்கள் சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவில் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், பவானி, கள்ளிப்பட்டி, கவுந்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story