குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு


குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Feb 2021 5:44 AM IST (Updated: 8 Feb 2021 5:47 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு.

ஓசூர்,

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக, ஓசூரை சேர்ந்த வக்கீல் கே.வி.ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற பிறகு அவர் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், ஓசூர் மற்றும் மத்திகிரியில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் சிறுவர் இல்லங்களில் குழந்தைகள், சினிமா மற்றும் சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். எங்கேனும் ஒரு சில இடங்களில் குறைகள் இருந்து அதனை பெரிதுபடுத்தி காட்டும்போது, சமூகத்தில் உள்ள குழந்தைகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. மாறாக, குழந்தைகள் தொடர்பான குறைகள் கண்டறியப்பட்டால் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ அல்லது ஆணையத்திற்கோ சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் தயாராக உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முன்பைவிட தற்போது இளம்வயது திருமணங்கள் குறைந்துள்ளது என்று கூறினார். இந்த ஆய்வின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி, ஓசூர் ஹோஸ்டியா சங்கத்தின் முன்னாள் தலைவர் ஞானசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story