ராமநாதபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு


ராமநாதபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 Feb 2021 7:02 AM IST (Updated: 8 Feb 2021 7:08 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர் நள்ளிரவில் திருடிச்சென்றுவிட்டான்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் பெரியார்நகர் கூரிச்சாத்த அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது39). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் இந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றுவிட்டார். இதுகுறித்து பாரதிதாசன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதேபோல, ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பாரதி (60). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்ததை யாரோ மர்ம நபர் நள்ளிரவில் திருடிச்சென்றுவிட்டான். இதுகுறித்து பாரதி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரேநாள் இரவில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் உள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story