மாற்றுத்திறனாளியின் தாய்க்கு உடனே உதவ உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்
கதறி அழுத மனு அளி்த்த மாற்றுத்திறனாளியின் தாய்க்கு உடனே உதவ மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் - சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ேதர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்து மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு கோரிக்கை மனு கொடுத்தவர்களில் 10 பேரை தேர்வு செய்ய உள்ளேன். மாவட்ட செயலாளர் சிபாரிசில் எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசில் அல்லது எனது சிபாரிசில்அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. பெட்டியில் இருந்து நானாகவே அடையாள அட்டையை எடுத்து பெயர்களை வாசிக்கிறேன். அவர்கள் சுருக்கமாக தங்கள் கோரிக்கைகளை பற்றி கூற வேண்டுகிறேன் என கூறினார்.
கதறி அழுத பெண்
அப்போது மனு அளித்த பாண்டி தேவி என்ற பெண் கதறி அழுத படி கூறியதாவது:-
எனது மகன் மாற்றுத்திறனாளி. நான் அவனை வைத்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். 40 முறை அதிகாரிகளிடம் உதவி கேட்டு மனு அளித்து விட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் எனக்கு உதவ வேண்டும் என கூறினார்.
அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
நான் வரும் போதே உங்களை கவனித்தேன். மாற்றுத்திறனாளி குழந்தையை வைத்து கொண்டு நீங்கள் படும் கஷ்டத்தை நான் நன்கு அறிவேன்.
மு.க.ஸ்டாலின் உறுதி
ஆதலால் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே உங்களுக்கு தேவையான உதவிகளை எங்களது மாவட்ட செயலாளர்கள் செய்வார்கள் என்று உறுதி அளித்து, அவருக்கு ஆறுதல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய பெட்டியினை மு.க. ஸ்டாலின் பூட்டி சீல் வைத்து சாவியை தன் பையில் வைத்துக் கொண்டார்.
முன்னதாக விருதுநகர் ராம்கோ விருந்தினர் மாளிகைக்கு வந்த மு.க.ஸ்டாலினை தனுஷ்குமார் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கப்பாண்டியன், சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
Related Tags :
Next Story