அற்புத குழந்தை ஏசு ஆலய தேர் பவனி


அற்புத குழந்தை ஏசு ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 8 Feb 2021 11:53 AM IST (Updated: 8 Feb 2021 11:54 AM IST)
t-max-icont-min-icon

அற்புத குழந்தை ஏசு ஆலய தேர் பவனி நடைபெற்றது.

பொன்மலைப்பட்டி, 

திருச்சி காட்டூர் ஆர்.கே.புரத்தில் அற்புத குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 9-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஆராதனையை பங்குதந்தை சூசைராஜ் நடத்தி வைத்தார். இந்த வருடம் கொரோனா காரணத்தினால் தேர்பவனியானது ஆலய வளாகத்திற்குள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கத்தோலிக்க இளைஞர்கள், கத்தோலிக்க மகளிர் அணி மற்றும் கத்தோலிக்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story