அரசு ஊழியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு சாலை மறியல்


அரசு ஊழியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Feb 2021 4:08 PM IST (Updated: 8 Feb 2021 4:08 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர். 

சாைல மறியல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் தொடர்ந்து 7-வது நாளாக இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. 

அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாரி வாழ்த்துரை வழங்கினார். சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் அண்ணாமலை உள்பட பலர் முன்னிலை வகித்தனர். 

இதில் வருவாய் துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், கிராம உதவியாளர்கள் சங்கம் என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கலந்து கொண்டனர். 

சாலை மறியல் போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி கிராம உதவியாளர் எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். மருத்துவ மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊழியம் வணங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

152 பேர் கைது

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 115 பெண்கள் உள்பட 152 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story