பள்ளிகளுக்கு உற்சாகத்துடன் வந்த மாணவ -மாணவிகள்
வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவ -மாணவிகள் வந்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவ -மாணவிகள் வந்தனர்.
கொரோனா
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக பொதுத்தேர்வு எழுத உள்ள 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் -1 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
அதன்படி இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 282 பள்ளிகள் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
மாவட்டத்தில் 9-ம் வகுப்பில் 20 ஆயிரத்து 212 மாணவ-மாணவிகளும், பிளஸ் -1 வகுப்பில் 16 ஆயிரத்து 865 மாணவ- மாணவிகளும் படித்து வருகின்றனர்.
நேற்று காலை முதலே மாணவ -மாணவிகள் சீருடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
பள்ளி நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து, கைகளில் கிருமிநாசினி தெளித்து அனுப்பினர். முகக்கவசம் அணியாமல் வந்த ஒரு சில மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவித்தனர். மேலும் மாணவ -மாணவிகள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டன.
பள்ளிக்கு வந்தவர்கள் கொரோனா அச்சம் தவிர்த்து சகஜமாக பேசி மகிழ்ந்தனர்.
கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் தொடங்கின. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பேராசிரியர்கள் வலியுறுத்தினர். சில கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டன. சில கல்லூரிகளில் பாதுகாப்பாக வகுப்பறைகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது.
Related Tags :
Next Story