கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களை கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்தனர். ஆனாலும் இளையரசனேந்தல் பிர்காவுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகள் இன்னும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனிலே உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தொலைவில் உள்ள குருவிகுளம் யூனியன் அலுவலகத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி யூனியனுடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்கி தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து எல்லைக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, தேசிய விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோரிக்கை மனு
சங்க மாநில தலைவர் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பரமேசுவரன், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்புகுழு தலைவர் முருகன், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ், ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story