ராணுவ வீரர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை- பணம்திருட்டு


ராணுவ வீரர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை- பணம்திருட்டு
x
தினத்தந்தி 8 Feb 2021 5:56 PM IST (Updated: 8 Feb 2021 5:56 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவ வீரர் வீடு உள்பட 2 வீடுகளில் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்

அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே முன்னாள் ராணுவ வீரர் வீடு உள்பட 2 வீடுகளில் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள், வீட்டில் தூங்கியவர்களையும், நாயையும் அறையில் வைத்து பூட்டிவிட்டு சென்றனர்.

முன்னாள் ராணுவ வீரர்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காளப்பபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 54). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சென்னையில் உள்ள அரசு வாணிபக் கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி மற்றும் மகன் ஆகியோர் காளப்பபுதூரில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை லட்சுமி, உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு வேலூர் சென்றுள்ளார். இந்த நேரத்தில் மர்ம நபர்கள் சந்திரசேகரன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

நகை-பணம் திருட்டு

அங்கு வீட்டில் வளர்த்த நாயை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, பீரோ மற்றும் அலமாரிகளில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.

அதேபோன்று பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணி என்பவரது வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள், மணி அவருடைய மகன் சீனிவாசன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்த அறைகளை பூட்டிவிட்டு, பக்கத்து அறையிலிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அறையில் வைத்து பூட்டினர் 

அதிகாலையில் எழுந்த மணி வெளியே வருவதற்கு கதவை திறக்கும் போது வெளியே பூட்டி இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது மகன் சீனிவாசன் அறையும் பூட்டப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து செல்போன் மூலம் உறவினர்களை அழைத்து கதவை திறந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பது 

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story