அதிக அளவில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
அதிக அளவில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது
போகலூர்
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றிய சுற்று வட்டார பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் கால்நடைகளை நம்பியே வாழும் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன.
இந்த ஆண்டு பெருமளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஓரிரு இடங்களில் மழை தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத நிலையில் அங்கு மட்டும் வயல்களில் அறுவடை செய்யப்படுகிறது அறுவடை செய்த பிறகு வைக்கோலை லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் எடுத்து செல்கின்றனர்.
ஆனால் ஒரு சில வாகனங்களில் ஆபத்தை உணராமல் அளவுக்கு அதிகமான வைக்கோல்களை ஏற்றி கொண்டு செல்லும்போது மின்வயர்களிலும் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் நெடுஞ்சாலைகளில் கொண்டு செல்லும்போது பின்னால் வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் வாகனங்களில் விபத்து ஏற்படாத வகையில் வைக்கோல்களை அளவாக ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகமாக வைக்கோல்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story