கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் வீரமணி ஆய்வு
கலெக்டர் அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் வீரமணி ஆய்வு செய்தார்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைத்திட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து மாவட்ட வனஅலுவலக குடியிருப்பு வளாகத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுவருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.சி.வீரமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் சிவன்அருள் உடன் இருந்தார்.
பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.109.71 கோடி மதிப்பீட்டில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டங்களில் அனைத்துத் துறை அலுவகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கம், மினி கூட்டரங்கம், கலந்தாய்வு கூட்டரங்கம், ஏ.டி.எம். அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி பொறியாளர் ரவி, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆர்.ஆறுமுகம், மணிகண்டன், வெள்ளையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story