திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்புஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்புஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 1:54 AM IST (Updated: 9 Feb 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்புஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,:-
ஜாக்டோ-ஜியோ சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், கனகராஜ், பசுபதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ராமன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். 

Next Story