மின்வாரிய அதிகாரிகள்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய அதிகாரிகள்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 1:58 AM IST (Updated: 9 Feb 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய அதிகாரிகள்- ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
மத்திய-மாநில அரசுகள் மின்வாரிய பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. மின் வினியோகத்தை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது. தொழிற்சங்கங்களை தொடர்ந்து அவமதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் பெரம்பலூர் வட்ட கிளையின் சார்பில் நேற்று காலை பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்களும், மதியம் பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டு நடவடிக்கை குழுவின் பெரம்பலூர் வட்ட கிளையின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story