தென்காசியில் ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதிவாசிகள் விடுதலை முன்னணி மகளிர் ஆயம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் தவிர பெரும்பாலான பகுதிகளில் வன உரிமை அங்கீகார சட்டம் 2006-ன் படி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக சமூக வன உரிமைகளை வழங்கி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தகுதியில்லாதவர்களுக்கு வழங்கி வரும் முதியோர் உதவி தொகையை ரத்து செய்து, தகுதியானவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story