வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை


வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 9 Feb 2021 3:17 AM IST (Updated: 9 Feb 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனை நடந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 103 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் 7 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. 

அதில் 18 லட்சத்து 73 ஆயிரத்து 438 வாக்காளர்கள் உள்ளனர். அதில் பல வாக்குச்சாவடிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம்பெற்றனர். 

இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  

அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உ‌ஷா, சப்-கலெக்டர்கள் சிவகுருபிரபாகரன், அசோகன், தேர்தல் தாசில்தார் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அப்போது வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

Next Story