மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
புகையிலைப்பட்டியில் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
கோபால்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி நாளை (புதன்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு நேற்று மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை நடைபெற்றது. மேலும் வாடிவாசல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டில் மதுரை, திருச்சி, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. இதைத்தொடர்ந்து காளைகளின் உரிமையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டது.
மேலும் அரசின் விதிப்படி ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை புகையிலைபட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story