சேலத்தில் 12-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
சேலத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவற்றின் சார்பில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
12-ந் தேதி
அதன்படி வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டு தேவைப்படும் பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
தனியார் துறையில் பணியில் சேரும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுவதில்லை. தொடர்ந்து பதிவை புதுப்பித்து கொள்ளலாம். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story