கவுந்தப்பாடி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட்டில் மோதி கார் கவிழ்ந்தது; தொழில் அதிபர் பலி


கவுந்தப்பாடி அருகே  மோட்டார்சைக்கிள்-மொபட்டில் மோதி கார் கவிழ்ந்தது; தொழில் அதிபர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2021 4:44 AM IST (Updated: 9 Feb 2021 4:44 AM IST)
t-max-icont-min-icon

கவுந்தப்பாடி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட்டில், கார் மோதி கவிழ்ந்த விபத்தில் தொழில் அதிபர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

கவுந்தப்பாடி அருகே 
மோட்டார்சைக்கிள்-மொபட்டில் மோதி கார் கவிழ்ந்தது; தொழில் அதிபர் பலி
கணவன், மனைவி உள்பட 6 பேர் படுகாயம்
கவுந்தப்பாடி அருகே மோட்டார்சைக்கிள்-மொபட்டில், கார் மோதி கவிழ்ந்த விபத்தில் தொழில் அதிபர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர். 
மோதியது
பவானி காவிரி வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). பொக்லைன் எந்திரங்களை வாடகைக்கு விடும் ெதாழில் செய்து வருகிறார். சரவணன் மற்றும் அவருடைய நண்பர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு கவுந்தப்பாடி- பவானி ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
கவுந்தப்பாடியை அடுத்த பூலப்பாளையம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியதுடன், நிலைதடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
சாவு
இந்த விபத்தில் மொபட்டில் சென்று கொண்டிருந்த ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த மணி (42), அவருடைய மனைவி நித்யா (32) மற்றும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த ஜோதிக்குமார் (30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியதுடன் அதில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்தை கண்டதும் அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 6 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
விபத்தில் இறந்துபோன சரவணனுக்கு சரண்யா என்ற மனைவியும், புவனேஷ்வரன் (7) என்ற மகனும், கிருத்திகா (3) என்ற மகளும் உள்ளனர். விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story