ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து ஜனாதிபதிதான் முடிவு எடுக்க வேண்டும்; பா.ஜனதா துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி


ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து ஜனாதிபதிதான்  முடிவு எடுக்க வேண்டும்; பா.ஜனதா துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 8 Feb 2021 11:15 PM GMT (Updated: 8 Feb 2021 11:15 PM GMT)

ராஜீவ்காந்தி கொைல குற்றவாளிகள் விடுதலை குறித்து ஜனாதிபதிதான் முடிவு எடுக்கவேண்டும் என்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள்
விடுதலை குறித்து ஜனாதிபதிதான் முடிவு எடுக்க வேண்டும்;
பா.ஜனதா துணைத்தலைவர் அண்ணாமலை பேட்டி 
ராஜீவ்காந்தி கொைல குற்றவாளிகள் விடுதலை குறித்து ஜனாதிபதிதான் முடிவு எடுக்கவேண்டும் என்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.
சரித்திர சாதனை
மத்திய அரசின் பட்ஜெட் விளக்க ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா, அச்சுறுத்தல்கள் அனைத்தையும் வெற்றிகரமாக இந்திய அரசு முறியடித்து, 2021-ம் ஆண்டில் சரித்திர சாதனை படைக்கும் பட்ஜெட்டை வழங்கி உள்ளது. 
கொரோனா தடுப்பு
உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட 4 முக்கிய விஷயங்களை முன்வைத்து இந்த பட்ஜெட் போடப்பட்டு உள்ளது. உள்கட்டமைப்பில் சாலை வசதி உலகிலேயே இதுவரை இல்லாத வகையில் தினசரி 30 கிலோ மீட்டர் என்ற அளவில் போட்டு வருகிறோம். அடுத்த நிதி ஆண்டுக்குள் இது தினசரி 40 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு உயரும். கொரோனா தடுப்புக்கு தேவைப்படும் அளவுக்கு நிதிவழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ள நிலையில் மேலும் 2 மருந்துகள் வர உள்ளன.
தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை மற்றும் சேலம்-சென்னை விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் 2-வது அலகு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 7 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 2 பூங்காக்கள் தமிழகத்துக்கு கிடைக்கும். அதில் ஒன்றினை நிச்சயமாக ஈரோட்டில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜனதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.
7 பேர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்திய அரசின் சி.பி.ஐ. மூலம் விசாரிக்கப்பட்டது. இன்னும் அந்த வழக்கு தொடர்பான தணிக்கை நடந்து வருகிறது. அது முடிக்கப்படாத வழக்காகும். இதில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் 4 பேர் இந்தியர்கள் இல்லை. அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். 3 பேர் இந்தியர்கள் தமிழர்கள். இந்த விஷயத்தில் குற்றத்தின் தன்மையை பார்க்க வேண்டும். தமிழர்கள் என்ற உணர்வுப்பூர்வமாக பார்க்கக்கூடாது. உணர்ச்சியை விட்டு வழக்கு ரீதியாக பார்த்தால் இந்த 7 பேரும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். வழக்கு மத்திய அரசால் நடத்தப்பட்டது. எனவே 7 பேர் விடுதலை குறித்த முடிவினை ஜனாதிபதிதான் எடுக்க வேண்டும். 
இவ்வாறு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.
கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியம், அஜீத்குமார், பொதுச்செயலாளர்கள் குணசேகரன், ஈஸ்வரமூர்த்தி, விவேகானந்தன், மாநில பொறுப்பாளர் ஆ.சரவணன், மாநில செயலாளர் சி.கே.சரஸ்வதி, எஸ்.சி. பிரிவு துணைத்தலைவர் விநாயகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Next Story