காரைக்குடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


காரைக்குடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2021 9:38 AM IST (Updated: 9 Feb 2021 9:46 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் பாரதி (வயது 28) இவர் அப்பகுதியில் உள்ள தனது உறவினரின் விசேஷத்திற்கு சென்றுவிட்டு சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் பாரதி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தார்.அப்போது பாரதி அணிந்திருந்த 3 தங்க சங்கிலிகளில் 2 சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. 6 பவுன் மதிப்புள்ள ஒரு சங்கிலி மட்டும் பறித்து சென்றுவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story