அவினாசி,ரோட்டில் கிடந்த பணத்தைபோலீசில் ஒப்படைத்த மினி ஆட்டோ உரிமையாளர்
அவினாசியில் ரோட்டில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த மினி ஆட்டோ உரிமையாளர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
அவினாசி,
அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 48) இவர் சொந்தமாக மினி ஆட்டோ வைத்துள்ளார். நேற்று அவினாசி தாலுகா அலுவலகம் பகுதியிலிருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி தனது மினி ஆட்டோவில் சென்றார். அவினாசி வடக்கு ரத வீதியில் சென்ற போது அவரது வாகனத்திற்கு முன்பு பல இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.
அதில் ஏதோ ஒரு வாகனத்திலிருந்து பணக்கட்டு ரோட்டில் விழுந்துள்ளது. அப்போது அந்த இரு சக்கர வாகனங்கள் எதுவும் நிற்காமல் சென்று விட்டது. இதைப்பார்த்த சந்திரமோகன் அந்த பணக்கட்டை எடுத்து பார்த்த போது அதில் ரூ.10 ஆயிரம் இருந்துள்ளது. தொடர்ந்து அந்த பணத்தை அவர் அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ரோட்டில் கிடந்த பணத்தை நேர்மை தவறாமல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரமோகனை அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
Related Tags :
Next Story