கீரமங்கலத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
கீரமங்கலத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி
கீரமங்கலம்:
கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். காலை முதல் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சிறுவர்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டியும், அதை தொடர்ந்து பெரியவர்களுக்கான உயரமான மரத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடந்தது. பல அணிகள் நீண்ட நேரம் முயற்சித்து ஏறினார்கள். இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story