ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை:
ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரியும், மாநில ஒருங்கிணைப்பாளர் கைது செய்ததை கண்டித்தும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் செல்வராஜ், ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ரா.மங்கல பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் குமரேசன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி கழக மாவட்டச் செயலாளர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜபருல்லா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story