கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 9 Feb 2021 12:25 PM IST (Updated: 9 Feb 2021 12:25 PM IST)
t-max-icont-min-icon

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி-தூத்துக்குடி நான்குவழிச்சாலை அருகே உள்ள மைதானத்தில் ெஜயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பந்தல்குடி 24 ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் சக்தி பாண்டியன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ராமர் வரவேற்றார். கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு இடங்களை அருப்புக்கோட்டை விக்டோரியா அணியினர்  பெற்று சாதனை படைத்தனர். அவர்களுக்கு நகர செயலாளர் சக்தி பாண்டியன், அம்மா பேரவை செயலாளர் இ.எஸ்.சேதுபதி பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை வழங்கினர். 


Next Story