திருப்பத்தூரில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முரளிதரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நல்.ஞானசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மு.சிவக்குமார், அரசு ஊழியர் சங்கம் பிரேம்குமார், தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் தேசிங்கு ராஜன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சத்தியமூர்த்தி, பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் பாலாஜி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.
பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், போராட்ட காலத்தில் பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்,
முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story