பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
காத்திருப்பு போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்
இதையொட்டி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையில் நேற்று காலை 10 மணிக்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்
அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சப்-கலெக்டர் வைத்திநாதனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இடஒதுக்கீடு
விலைவாசி உயர்வு காரணமாக மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000, கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை வைத்து ஒரு மாதத்திற்கு பால் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.
எனவே ரூ.1000 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், ரூ.1500 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் புதிய சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story