ஆலந்தைல மீனவ கிராமத்தில் ரூ.52.46 கோடியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ.52.46 கோடியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூ.52.46 கோடியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
மீனவர்கள் கோரிக்கை
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 1, 500 மீனவ குடும்பங்கள் உள்ளது. சுமார் 195 பைபர் படகுகள் உள்ளன. இக்கிராமத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கடல் கடலரிப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் படகுகளும் உடமைகளும் சேதமடைகிறது. மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடும் சூழ்நிலை நிலவியது. இதனால் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தூண்டில் வளைவு பாலம்
இந்நிலையில் ஆலந்தலை கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு ரூ.52.46 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இத்திட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக காத்திருந்தது. தற்போது தடையில்லா சான்றிதழ் கிடைத்ததால் இக்கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு தமிழக முதல்-அமைச்சர் வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
இதையடுத்து, ஆலந்தலை கிராமத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பூமி பூஜை முடிந்தவுடன் கல் எடுத்து கொடுத்து பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக ஆலந்தலை பங்கு தந்தை ஜெயகுமார் அர்சிப்பு செய்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் பேசுகையில், ஆலந்தலையில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்பது 33 ஆண்டு கனவு திட்டம். இன்றைக்கு மீனவர்களின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. ஏற்கனவே ஆலந்தலை கிராமத்திற்கு ரூ.3 கோடியில் பேவர் பிளாக் கற்கள் பதித்துள்ளோம். குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வழங்கியுள்ளோம். அப்போது எல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை. தூண்டில் வளைவு பாலம் அமைக்கும பணியை தொடங்கி வைத்து போது தான் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், திட்ட அலுவலர் தனபதி, உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வக்கீல் செல்வகுமார், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், காசிராஜன், அழகேசன், திருச்செந்தூர் யூனியன் துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, நகர செயலாளர்கள் காயல் மௌலானா, செந்தமிழ்சேகர், ஆலந்தலை உதவி பங்குதந்தை ரினோ, ஆலந்தலை ஊர்தலைவர் மகிபன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ரொமில் உள்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.
ரூ.5.16 கோடியில் புதிய கட்டிடம்
மேலும், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.5.16 கோடி மதிப்பில் தரைதளம், முதல் தளத்தில் 48 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் நச்சு முறிவு சிகிச்சை மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூ.60 லட்சம் செலவில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு ஆகியவை முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பங்கேற்பு
இதனை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம வீடியோ காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பொன் இசக்கி, தாசில்தார் முருகேசன், திருச்செந்தூர் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, டாக்டர்கள் சியாமளா, சுமதி, மல்லிகா, கோமதிநாயகம், ராஜேஸ்குமார், மனோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story