மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:07 PM IST (Updated: 9 Feb 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி:
ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேறும் போராட்டம் 
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்க உறுப்பினர் தவமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் குறைந்த அளவு பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவது போல், தமிழகத்திலும் வழங்க வேண்டும்.
ரூ.5 ஆயிரம் உதவி தொகை 
 முழு அளவில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவிதொகை வழங்க வேண்டும். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.
நாகை
நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று குடியேறும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நாகை நகரச் செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். இதில் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் தாலுகா அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர

Next Story