பேராசிரியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு


பேராசிரியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 9 Feb 2021 11:13 PM IST (Updated: 9 Feb 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு.

பொம்மிடி, 

பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சரவணன் (வயது 35). இவர் தர்மபுரி கலைக்கல்லூரியில் கம்ப்யூட்டர் பிரிவு சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் கணவன், மனைவி குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன் மேல்மாடியில் தூங்கினார். பின்னர் சரவணணுக்கு சொந்தமான ரைஸ்மில்லில் வேலை இருப்பதால் அங்கு சென்றதாக கூறப்படுகிறது. 

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து பொம்மிடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story