சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு.
திருவரங்குளம்,
திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைமாத 2-வது பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருகம்புல் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேேபால் சுவாமி-அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் சிவபெருமான் காளை வாகனத்தின் பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் காசிக்கு வீசம் கூட என்றழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில், திருமலை ராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர கதிர் காமேஸ்வரி கோவில், விஜய் ரகுநாதபுரம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
Related Tags :
Next Story