நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்த பெண்கள்
கல்லல் அருகே நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கல்லல்,
கல்லல் அருகே நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
செவ்வாய் பொங்கல் விழா
இந்த செவ்வாய் பொங்கல் விழாவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார்களும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது.
319 பெண்கள் பங்கேற்பு
அதன்படி நேற்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட முத்துராமன் செட்டியார் மகன் கருப்பையா செட்டியார் முதல் பொங்கல் வைக்க அதன் பின்னர் 319 பெண்கள் நீண்ட வரிசையில் நின்று விறகு அடுப்பில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் வரிசையாக நின்று பொங்கல் வைத்த காட்சி பார்க்க அற்புதமாக இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பொங்கல் பொங்கிய பின்னர் பெண்கள் குலவையிட்டு சாமி கும்பிட்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் நகரத்தார்களும் திரளாக கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story