ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:52 PM IST (Updated: 9 Feb 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

கரூர்,

சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கரூர் மாவட்ட ஜாக்டோஜிேயா அமைப்பினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்று மாலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு  ஜாக்டோஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், மலைக்கொழுந்தன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், அந்த அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story