கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்


கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:55 PM IST (Updated: 10 Feb 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் 2-வது நாளாக நேற்றும் நீடித்தது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இந்த சீற்றம் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

2-வது நாளாக நீடிப்பு

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றம் இருந்ததால் காலையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  கடல் சீற்றம் தணிந்ததைத்தொடர்ந்து மதியம் 1.30 மணியில் இருந்து படகு போக்குவரத்து தொடங்கியது.
வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்களும் செல்லாததால் படகுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

Next Story