பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறந்த பிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறந்த பிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2021 11:58 PM IST (Updated: 9 Feb 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறந்த பிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறந்த பிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்ேகாட்டையன் கூறினார். 
வேலைவாய்ப்பு முகாம்
கோபியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் நவோதயா, மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற தகவல் தற்போது தான் கிடைத்து உள்ளது. இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்படி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார். அரசு பள்ளிக்கூடங்களில் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறந்த பிறகு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்

Next Story